Mon. Oct 6th, 2025



தென்காசி, செப்டம்பர் 17 –
எஸ்டிபிஐ (சமத்துவ மக்கள் கட்சி) மாநில செயலகக்குழு கூட்டம் தென்காசியில் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் ஹமீது, அச. உமர் பாரூக், மாநில பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அகமது நவவி, அபூபக்கர் சித்திக், ஏ.கே. கரீம், மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் நஸ்ரூதீன், மாநில செயலாளர் ஷபீக் அஹம்மது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் அமீர் ஹம்சா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கட்சியின் வளர்ச்சி திட்டங்கள், 2026 சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

🔹 தீர்மானம் 1

செப்டம்பர் 13 அன்று திருச்சியில் நடைபெற்ற தொகுதி நிர்வாகிகள் மாநாடு மாபெரும் வெற்றியைப் பெற்று, கட்சியின் அமைப்பு வலிமையையும், பரந்த செல்வாக்கையும் வெளிப்படுத்தியது. மாநிலம் முழுவதும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்ற இம்மாநாடு, எஸ்டிபிஐ வளர்ச்சிப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்பட்டது. இதன் வெற்றிக்கு பங்களித்த நிர்வாகிகளுக்கு மாநில செயலகக்குழு நன்றி தெரிவித்தது.

🔹 தீர்மானம் 2

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தொகுதி நிர்வாகிகள் மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டவாறு, மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக பூத் கமிட்டிகளை அமைத்து விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று மாநில செயலகக்குழு அறிவுறுத்தியது.

🔹 தீர்மானம் 3

வக்ஃப் திருத்தச் சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு பகுதி நிவாரணம் அளித்தாலும், சட்டத்தின் ஆபத்தான பிரிவுகள் நீடிப்பதால், வக்ஃப் அமைப்புகளுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது. சட்டத்தின் தீங்கு விளைவிக்கும் அம்சங்களை முற்றிலும் ரத்து செய்யும் இறுதி தீர்ப்பை வழங்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டதோடு, இதற்காக எஸ்டிபிஐ சட்டரீதியான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் என தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகளுடன் கூட்டம் நிறைவடைந்தது.

✍️ அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்

 

By TN NEWS