Mon. Oct 6th, 2025

 


குடியாத்தம், செப்.17:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர கழக அதிமுக செயலாளர் ஜே.கே.என். பழனி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் கஸ்பா ஆர்.மூர்த்ததி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, முன்னாள் நகர மன்றத் தலைவர் மாயா பாஸ்கர், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்.டி. மோகன்ராஜ், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வி.இ. கருனா, நகர துணைச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன், 35வது வார்டு மேல அமைப்பு பிரதிநிதி கே.வி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர், கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS