🚨 மக்களே உஷார்..! 🚨
சென்னையில் நுழைந்த ‘நவோனியா’ கொள்ளைக் கும்பல் குறித்து காவல்துறை எச்சரிக்கை!
👉 கூட்ட நெரிசல் அதிகம் உள்ள எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், மெரினா கடற்கரை போன்ற இடங்களில் இக்கும்பல் கைவரிசை காட்டும் அபாயம் உள்ளது.
👉 சமீபத்தில் கும்பல் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்களுக்கு ஏற்கெனவே பல வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
⚠️ பொதுமக்கள் தங்கள் மொபைல், நகை, பணம் போன்ற உடமைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.
⚠️ சந்தேகத்திற்கிடமான நபர்கள் தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கவும்.
🔴 சென்னை பெருநகர காவல் துறை – பொதுமக்கள் பாதுகாப்பிற்கான எச்சரிக்கை 🔴
தமிழ்நாடு டுடே செய்திகள் ஊடகம் .