Sun. Oct 5th, 2025



சமூக வலைதளங்களின் மீதான கட்டுப்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அணுகுமுறை சமீபத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரம் மற்றும் தனியுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

2025 மார்ச் மாதத்தில், உச்ச நீதிமன்றத்தின் ஒரு அமர்வு கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் சில தற்போதைய வழக்குகளில், அந்த முன்னுதாரணத்திலிருந்து மாறுபட்ட நிலைப்பாடு எடுத்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம், சோசியல் மீடியா தளங்களில் தவறான தகவல்கள், வெறியூட்டும் பிரச்சாரங்கள், AI மூலம் உருவாக்கப்படும் தவறான உள்ளடக்கங்கள் அதிகரித்து வருவதாக சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. இத்தகைய தகவல்கள் பல முறை சமூக அச்சத்தையும், தேவையற்ற பதற்றத்தையும் உருவாக்கியுள்ளன. இதற்கெதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படாததே பெரும் கேள்விக்குறியாகும்.

ஆனால், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கள், விமர்சனங்கள் போன்றவை மட்டுமே தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம், தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் நீதிமன்றத்தின் அணுகுமுறை உண்மையில் யாரின் உரிமைகளை பாதுகாக்கின்றது என்ற கேள்வியும் எழுகிறது.

சமூக அமைப்புகள் வலியுறுத்துவது:

கருத்துரிமையை அடக்காமல் பாதுகாக்க வேண்டும்.

தவறான தகவல் பரப்புதலுக்கு தளங்களும் பொறுப்பு ஏற்க வேண்டும்.

நீதித்துறை, அரசின் பக்கம் மட்டும் அல்லாமல் மக்களின் உரிமைகளையும் காப்பதற்கு முன்வர வேண்டும்.


இந்த விவகாரம் மக்கள் மத்தியில் “கருத்துரிமை, பொய்த்தகவல், நீதித்துறையின் பங்கு” என்ற மூன்று அடிப்படை கேள்விகளை எழுப்பியுள்ளது. வரலாறு காட்டியது போல, மக்களின் உரிமைகள் மீறப்படும் போது எப்போதும் சமூகத்தில் போராட்ட குரல் எழுந்துள்ளது.

சேக் முகைதீன்

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம்.

By TN NEWS