📍Tamil Nadu Today News Report:📍
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வழக்கறிஞர் மீது நடைபெற்றதாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சட்ட சமூகத்தில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி அருகே மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துரைவேல் பாண்டியன் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலையில் காயம் அடைந்ததோடு, உடலிலும் அடிபட்டதாகவும், அவரது செல்போனும் உடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக காவல்துறை விரிவான விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சமூகத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.
🚩“வழக்கறிஞர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும்?” – சமூக வலைதள பதிவுகள்.
🛑“இந்த தாக்குதலை எங்கள் நிறுவனம் வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடி நடவடிக்கை தேவை.” – குளோபல் லா ஃபவுண்டேஷன்🛑
முன்பும் வழக்கறிஞர்கள் மீது தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் தமிழகத்தில் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.
🎈தமிழ்நாடு டுடே அரசுக்கு கோரிக்கை:🎈
சமீபத்திய காலங்களில் வழக்கறிஞர்கள், காவல்துறையினர், பத்திரிக்கையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மீது தாக்குதல்களைத் தமிழகத்தில் தொடர்ந்து வழக்கமாக்கி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
அரசு இதற்கு உடனடியாக நிரந்தர தீர்வு கிடைக்க ஆவண செய்து தகுந்த நடவடிக்கைகளை மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம்.
சேக் முகைதீன்
இணை ஆசிரியர்
தமிழ்நாடு டுடே மீடியா செய்திகள்.