Sun. Oct 5th, 2025



ஒடுகத்தூர் சங்கரா மேல்நிலைப் பள்ளியில் “சிலம்பம் சுற்றும்” நிகழ்ச்சி.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் ஸ்ரீ சங்கரா மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு விளையாட்டு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பாக “சாதனைத் தமிழர் புத்தகம்” முன்னெடுத்த திருக்குறள் சொல்லியபடி சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுமார் 40 நிமிடங்கள் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவ மாணவிகள் திருக்குறளை சொல்லிக்கொண்டே சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியை அறக்கட்டளை நிறுவனர் திரு. க. ராஜதுரை, நிர்வாகிகள் சுரேஷ், விக்னேஷ், அனிபா, ஷாயதி, ரியானா சர்ஜுனா ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாணவ–மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக சங்கரா மேல்நிலைப் பள்ளி தாளாளர் கலந்து கொண்டு, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

✍️ கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS