Sun. Oct 5th, 2025

அமித் ஷா – செங்கோட்டையன் சந்திப்பு : தமிழக அரசியலில் அதிர்வு:

புதுடில்லி :
அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) விதித்த நடவடிக்கையால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புதிய அரசியல் அலைச்சலை உருவாக்கியுள்ளார்.

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுத்து, அவரின் ஆதரவாளர்களின் கட்சிப் பொறுப்புகளும் பறிக்கப்பட்ட நிலையில், அவர் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியினருடனும் பொதுமக்களுடனும் சந்தித்து ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் திட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க. தலைமை அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பைத் தொடர்ந்து, நேற்று டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், தமிழக அரசியல் நிலவரம், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு முயற்சிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அமித் ஷா விரிவாக கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இன்று (09.09.2025) தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் டில்லி செல்கிறார் என்பது மேலும் அரசியல் வட்டாரங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் நிபுணர்கள் கருத்துப்படி:
“அ.தி.மு.க. அரசியலை ஒட்டுமொத்தமாக இயக்குபவர் அமித் ஷா என்பதே இப்போது தெளிவாகிறது” என மதிப்பிடப்படுகிறது.

சேக் முகைதீன்

By TN NEWS