நெல்லை, செப்டம்பர் 7:
நாளை (07.09.2025, ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் திரு. விஜய் வசந்த் எம்.பி. அன்பான அழைப்பை விடுத்துள்ளார்.
இந்த மாநாடு, எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி எம்.பி. அவர்களின் கரங்களை வலுப்படுத்தவும், ஒட்டு திருட்டுக்கு எதிராக குரல் கொடுக்கவும் நடைபெறுகிறது. மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை அவர்களின் தலைமையில், நெல்லை பெல் பின் மைதானத்தில் மாலை நடைபெறும் இந்த மாநாடு, மக்களின் வாக்குரிமை பாதுகாப்பையும் ஜனநாயக மதிப்புகளையும் வலியுறுத்தும் முக்கிய நிகழ்வாக அமைகிறது.
மாநாட்டின் நோக்கம்
சமீபத்திய தேர்தல்களில் நிகழ்ந்த ஒட்டு திருட்டு மற்றும் முறைகேடுகளை எதிர்த்து குரல் கொடுப்பது.
ஜனநாயகத்தை காக்கும் பணியில் மக்களை நேரடியாக ஒன்றிணைப்பது.
“சத்தியம் – உண்மை – ஜனநாயகம்” என்ற ராகுல் காந்தி அவர்கள் காட்டும் பாதையை வலுப்படுத்துவது.
மாநாட்டின் சிறப்பு:
மாநிலம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள், துணை அமைப்புத் தலைவர்கள் பங்கேற்பார்கள்.
நெல்லை மாநாடு, மக்களின் வாக்குரிமை காக்கும் உறுதியின் வெளிப்பாடாக அமையும்.
வீரத்திற்கு பெயர் பெற்ற நெல்லை மண்ணிலிருந்து எழும் குரல், டெல்லி வரை ஒலிக்கச் செய்யப்படும்.
விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியது:
“நாம் நெஞ்சை நிமிர்த்தி ‘நான் காங்கிரஸ்காரன்’ என்று பெருமையுடன் சொல்லும் நாளாக இந்த மாநாடு அமைய வேண்டும். ஜனநாயக விரோத சக்திகளை அடிபணியச் செய்யும் குரல் நெல்லையில் இருந்து எழ வேண்டும். அனைவரும் அலைகடலென அணி திரண்டு பங்கேற்று, மாநாட்டை வெற்றி பெறச் செய்யுங்கள்.” என அழைப்பு விடுத்துள்ளார்.
அமல்ராஜ்
தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.