Tue. Oct 7th, 2025



திண்டுக்கல் மாவட்டம் புனித செசிலியாஸ் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. சரவணன் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு. ஐ.பி. செந்தில்குமார், திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர், மாநகராட்சி மேயர் திருமதி. இளமதி, துணை மேயர் திரு. ராஜப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு, மாணவர்களுடன் இணைந்து காலை சிற்றுண்டி உண்ணிய மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், மாணவர்களின் நலனையும் கல்வியையும் முன்னிறுத்தும் விதத்தில் இந்தத் திட்டம் பெரிதும் பயனளிக்கும் எனக் கூறினர்.

மேலும் பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு திட்டத்தை வாழ்த்தினர்.

– ராமர், திருச்சிராப்பள்ளி

 

By TN NEWS