தென்காசி:
தென்காசி நகராட்சியின் 21வது வார்டு சொர்ணபுரம் மேட்டுத்தெரு (கோழிப்பண்ணை தெரு) மேற்கு பகுதியில் கழிவுநீர் ஓடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது மக்மூத் தலைமையில், காங்கிரஸ் நகர தலைவர் மாடசாமி ஜோதிடர் ஏற்பாட்டில், காங்கிரஸ் சிறுபான்மைத்துறை மாவட்ட தலைவர் ஹலால் சலீம் அறிவுறுத்தலின்படி, கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார் அவர்களை சந்தித்து மனு அளித்தனர்.
மாவட்ட செயலாளர் சீனா, சேனா சர்தார், தொகுதி துணைத்தலைவர் பாதுஷா, தொகுதி செயலாளர் கோல்டன் பாதுஷா, நகர செயலாளர் ஷேக் மைதீன், 18வது வார்டு தலைவர் சலீம், வார்டு செயலாளர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், விரைவில் கழிவுநீர் ஓடை அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
செய்தியாளர் : அமல்ராஜ்
முதன்மை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்