Sun. Aug 24th, 2025



பொதுமக்கள் கோரிக்கைகள் பெற்றுத் தீர்வு காணும் முயற்சி

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே தாட்டிமாணப்பள்ளி மற்றும் கல்லாப்பாடி ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காணும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கல்லாப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் குமார் தலைமையேற்றார். தாசில்தார் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் குமார் முன்னிலையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் இ. சத்யானந்தம், வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர்.

பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள்

மகளிர் உரிமை தொகை

முதியோர் ஓய்வூதியம்

குடும்ப அட்டை

இலவச வீட்டு மனைப் பட்டா

பெயர் திருத்தங்கள்

மின் தொடர்பான பிரச்சினைகள்


இவற்றைத் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்து மக்கள் மனுக்களை அளித்தனர்.

பங்கேற்ற அதிகாரிகள்

முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் அசோக் குமார், கார்த்திக், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், சசிகுமார், காந்தி, பல்வேறு துறை அதிகாரிகள், கிராம உதவியாளர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஹேமலதா, கருணாநிதி, கௌரப்பன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, தாட்டிமாணப்பள்ளி ஊராட்சி செயலாளர் ஆனந்தன், கல்லாப்பாடி ஊராட்சி செயலாளர் கமல், ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மேலும் போலீசார், செவிலியர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமை சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் : கே.வி. ராஜேந்திரன்



By TN NEWS