தஞ்சாவூர், ஆகஸ்ட் 22:
தமிழ்நாட்டின் சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. பிரியங்கா பங்கஜம், ஐ.ஏ.எஸ்., அவர்களுக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் பாராட்டு தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் சிறப்பு விருது பெற மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று சங்கத்தின் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் மற்றும் செயலாளர் முனைவர் இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அப்போது முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஐ.ஏ.எஸ். எழுதிய “இறையன்பு ஓராண்டு உரைகள்” என்ற நூலை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழங்கினர்.
விவசாயிகள் சங்கத்தினர்,
“காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில், விவசாயிகளின் நலன் கருதி ஆட்சித் தலைவர் மேற்கொண்டு வரும் பணிகள் சிறப்பாக உள்ளது. அரசு அங்கீகாரம் அதற்கு சான்று. எதிர்காலத்திலும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்” என்று பாராட்டு தெரிவித்தனர்.
தஞ்சாவூர் முதன்மை செய்தியாளர் ;
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்