Thu. Aug 21st, 2025

 

விழுப்புரம் :
விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு, தமிழக அரசால் Quick Response Team எனப்படும் இரண்டு அதிநவீன ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப. சரவணன், ஐ.பி.எஸ்., அவர்கள் இன்று வாகனங்களை பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கிவைத்தார்.

இவ்வாகனங்களில் நான்கு பக்க கேமராக்கள், ஆடியோ–வீடியோ வசதி, ஒலிபெருக்கி, மேலும் சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு முதல் நிலை காவலர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் இருப்பர்.

இந்த ரோந்து வாகனங்கள் விழுப்புரம் உட்கோட்டம் மற்றும் கோட்டகுப்பம் உட்கோட்டங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும். குற்றங்களைத் தடுப்பதிலும், சம்பவங்களை உடனுக்குடன் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதிலும் இக்குழுக்கள் செயல்பட உள்ளன.

வி. ஜெய் சங்கர் – தலைமை செய்தியாளர், கள்ளக்குறிச்சி மாவட்டம்

 

By TN NEWS