Thu. Aug 21st, 2025





வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தையில், நம் இந்திய தாய் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழா சிறப்பாக நடைபெற்றது.

வேளாண்மை உற்பத்தியாளர் குறை தீர்வு குழு உறுப்பினர், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் மற்றும் வேலூர் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மு. சேகர், மாவட்ட பொருளாளர் பா. ஆணந்தன் தலைமையில், விவசாயிகள் முன்னிலையில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் திரு. சுதாகர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் “இயற்கை வேளாண்மை செய்திடுவோம்; மண் வளத்தையும் மக்களையும், மண்ணில் வாழும் உயிரினங்களையும் காத்திடுவோம்” என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும், வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற இருக்கும் குடியாத்தம் உழவர் சந்தை 25வது ஆண்டு நிறைவு விழா மற்றும் 26வது ஆண்டு துவக்க விழா மிகச் சிறப்பாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் – கே.வி. ராஜேந்திரன்


 

By TN NEWS