Thu. Aug 21st, 2025

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமாண்டஹள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில், 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய பாடல்களுக்கு நடனப்போட்டி மற்றும் “மீண்டும் மஞ்சபை” விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், பேனா, பென்சில், நோட்டு புத்தகங்கள் மற்றும் மஞ்சபைகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் திருமதி பெ. சாரதா, உதவி ஆசிரியர்கள் ர. கோவிந்தராஜ், சா. சிவாஜி, சி. உஷாராணி, சு. சரண்யா, மு. பூமதி, நூலகர் திரு. சண்முகம், வெங்கடேசன், சம்பத், துப்புரவு பணியாளர் திரு. குமரன், பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாக தலைவர் நா. சின்னமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாணவர்கள், “பூமி வெப்பத்தை தடுக்க மரங்களை நட்டிடுவோம்”, “சாலை விதிகளை மதிப்போம்”, “பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம் – மீண்டும் மஞ்சபையை பயன்படுத்துவோம்” என்று உறுதிமொழி எடுத்தனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, சுதந்திர தின நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

பசுபதி – தலைமை செய்தியாளர்.

 

By TN NEWS