வேலூர் மாவட்டம், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்வு நாள் இன்று (14.08.2025) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார். வேளாண்மை துறை இணை இயக்குனர் உமாசங்கர் முன்னிலை வகித்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார்.
விவசாய சங்கப் பிரதிநிதிகள், காணார் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி தடுப்பணைகள் அமைத்தல் மற்றும்
பராமரிப்பின்றி மோசமான நிலையில் உள்ள சுதந்திர தின பொன் விழா நினைவு கட்டிடத்தை மீண்டும் பயன்பாட்டில் கொண்டு வந்து மருத்துவத்துறைக்கு ஒப்படைத்தல்,
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் தொடர்பான விரிவான தகவல்கள் வழங்கல்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவாதித்தனர்.
பல துறை அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா
செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்.