வேலூர் மாவட்டம், ஆகஸ்ட் 12 — குடியாத்தம் கே. எம். ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், போதைப்பொருள் தடுப்பு சங்கம் மற்றும் நாட்டு நலப் பணி திட்டம் ஆகியவை இணைந்து, சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி இளைஞர்களின் மேம்பாடு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கருத்தரங்கினை நடத்தியது.
முதல்வர் முனைவர் சி. தண்டபாணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செஞ்சுருள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே. விநாயகமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையின் மாவட்ட மனநல மருத்துவர் பா. சிவாஜி ராவ், “இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய, நல்ல உடல் ஆரோக்கியம் மற்றும் மனநலன் அவசியம். போதைப்பொருள் மற்றும் தீய பழக்கவழக்கங்கள் இளைஞர்களின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் என்பதையும், அவற்றை தவிர்க்கும் உறுதியுடன் முன்னேற வேண்டும்” என வலியுறுத்தினார்.
முன்னதாக, போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி நிகழ்வு நடைபெற்றது. இதில், கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்விப் புல முதன்மையர் முனைவர் தா. மணிகண்டன், மாணவர் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. ஜெயகுமார், நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் வி. உமா மகேஸ்வரன், செஞ்சுருள் சங்க உறுப்பினர் வி. பி. அருள் ஆகியோர் செய்திருந்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்: கே. வி. ராஜேந்திரன்