திண்டுக்கல் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில், திமுக மற்றும் தமிழக விவசாயிகள் கழகம் (த.வெ.க.) இடையே கடும் போஸ்டர் யுத்தம் வெடித்துள்ளது.
த.வெ.க. போஸ்டர் — “கடந்த தேர்தலில் அமைச்சர் ஐ. பெரியசாமி பெற்ற 1,35,571 வாக்கு வித்தியாசத்தை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று, தலைவர் விஜய் வெற்றி பெற வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு, வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
திமுக இளைஞரணி போஸ்டர் — “ஆத்தூர் தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் த.வெ.க. வேட்பாளர் டெபாசிட் (முன்பணம்) பெற்றால், நான் சேலை கட்டுகிறேன்… it’s true bro; இல்லையெனில் நீங்க? BRO? it is very wrong bro” என சவால் விடுக்கும் வகையில் போஸ்டர்கள் பதிக்கப்பட்டுள்ளன.
அரசியல் விமர்சகர்கள், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான போஸ்டர் போராட்டம், முதல்முறையாக அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்களின் ஆத்தூர் தொகுதியில் துவங்கியதாகக் குறிப்பிடுகின்றனர்.
தமிழ்நாடு டுடே, ராமர், திருச்சி மாவட்டம்