தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை, 2024ஆம் ஆண்டில் கஞ்சா கடத்தலை தடுப்பதில் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. இந்த சிறப்புக்காக, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் (SP) ஆஷிஷ் ராவத், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் விருதைப் பெற்றார்.
கடந்த ஆண்டு தஞ்சை காவல்துறை 243 கஞ்சா தொடர்பான வழக்குகளை பதிவு செய்து, 1031 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததுடன், 373 குற்றவாளிகளை கைது செய்தது.
இந்த சாதனையில், அப்போதைய கஞ்சா ஸ்பெஷல் டீம் தலைமையிலிருந்த தற்போதைய மருத்துவக் கல்லூரி உதவி ஆய்வாளர் டேவிட் மற்றும் அவரது குழுவினரின் கடும் உழைப்பும் முக்கிய பங்காற்றியது.
இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்