Fri. Aug 22nd, 2025

 

தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையம் சார்பில் அடையாளம் தெரியாத மற்றும் உரிமை கோரப்படாத ஆதரவற்றவர்களின் 22 சடலங்களுக்கு கடந்த 09.05.2025 அன்று ராஜகோரி இடுகாட்டில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வை தொடர்ந்து, 04.07.2025 அன்று மேலும் 20 சடலங்களுக்கும் இறுதி மரியாதை நடைபெற்றது.

அதன்பின், இன்று (10.08.2025) தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையம் சார்பில் 9 சடலங்களுக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இராஜாராம் த.கா.ப., அவர்கள் தலைமையில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் மருத்துவ கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி சந்திரா, மாநகராட்சி ஆணையர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ், முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்

 

By TN NEWS