தாருஸ்ஸலாஹ் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் கருத்தரங்கு இன்று (10.08.2025) திருநெல்வேலி மாவட்டம்,ராமையன்பட்டியில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசரும், தமிழ்நாடு அறிவுரை குழுமத் தலைவருமான மாண்புமிகு K. N. பாட்ஷா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, சமூக நல்லிணக்கம், சமத்துவம் மற்றும் சட்ட ஆட்சியின் முக்கியத்துவம் குறித்து ஆழமான உரையாற்றினார். மேலும், சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினரும், முன்னாள் மாவட்ட நீதிபதியுமான ஜனாப் ஜியாவுதீன் அவர்கள் சமூக ஒற்றுமைக்கான சட்டத்தின் பங்கு குறித்து விளக்கமளித்தார்.
விழாவில் மதிமுக ஊடகப் பொறுப்பாளர் மின்னல் முகம்மது அலி, சகோதரர் மில்லத் இஸ்மாயில், தென்காசி மருத்துவர் Dr. அப்துல் அஜீஸ் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்றனர். கருத்தரங்கின் ஒழுங்கு ஏற்பாடுகளை வழக்கறிஞர் காஜா ஷெரீப், ஆச்சிஸ் ஜஹாங்கிர் மற்றும் தாருஸ்ஸலாஹ் நிர்வாகிகள் சிறப்பாக முன்னெடுத்தனர்.
K.A.மஸ்தான்
மதிமுக ஒன்றிய செயலாளர்
மானூர் மேற்கு
நெல்லை மத்திய மாவட்டம்
தொகுப்பு: சேக் முகைதீன்
இணை ஆசிரியர் – TAMILNADU TODAY.