தென்காசி புளியங்குடியில் கரடி தாக்கி 3 பேர் காயம் – SDPI கட்சி கண்டனம்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி விவசாயப்பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் தொடர்கிறது. இன்று (07.08.2025) காலை 8.30 மணியளவில் விவசாயப்பணிகளில் ஈடுபட்டிருந்த சேவம்மா, ராமலெட்சுமி, அம்பிகா ஆகிய மூவரையும் கரடி தாக்கியது. இதில் மூவரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களை புளியங்குடி SDPI கட்சியின் சார்பில் வர்த்தக அணி மாவட்ட செயலாளர் தமீம் அன்சாரி, நகர செயலாளர் நவாஸ்கான், இணை செயலாளர் யாசின் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
வனவிலங்குகளால் தாக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, காயமடைந்தவர்களுக்கு தக்க இழப்பீடு வழங்க வேண்டும் என SDPI கட்சி வலியுறுத்தியுள்ளது.
ஜோ.அமல்ராஜ்
தலைமை செய்தியாளர்
தென்காசி மாவட்டம்.