தஞ்சாவூர், ஆகஸ்ட் 5:
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்கள் தலைமை வகித்தார். திட்டத்தின் நன்கு செயல்பாடு மற்றும் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படும் விதமாக, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள சூழ்நிலைகளை அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அலுவலர்கள், திட்டப் பணிகள் குறித்து விளக்கமும், எதிர்கால நடைமுறைகள் பற்றிய பரிந்துரைகளும் வழங்கினர்.
– இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர், தஞ்சாவூர்