Fri. Aug 22nd, 2025

வேலூர் மாவட்டம், குடியாத்தம் – வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வியாழக்கிழமை, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர், வருங்கால தமிழக முதல்வர், புரட்சித் தமிழர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகரில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு, வெளிநாட்டு சுற்றுப்பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இன்று வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த. வேலழகன், நகர கழக செயலாளர் J.K.N. பழனி, ஒன்றிய கழக செயலாளர் T. சிவா ஆகியோர், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெறவுள்ள கூட்ட இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அவர்களுடன் மாவட்ட கழக துணைச் செயலாளர்கள் R. மூர்த்தி, S. அமுதா சிவப்பிரகாசம், காடை மூர்த்தி, புகழேந்தி, S.S. ரமேஷ்குமார், B.H. இமகிரி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்ட இடத்திற்கான ஏற்பாடுகள், மக்கள் கூடுதல் வசதி, பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்த பிரச்சார கூட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கவனம் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

– குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K.V. ராஜேந்திரன்

 

By TN NEWS