Fri. Aug 22nd, 2025

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருவந்தா ஊராட்சியில், தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின்” மக்கள் குறைதீர் முகாம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாம், தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு. ஜெயபாலன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முகாமின்போது பொதுமக்களிடம் இருந்து பட்டா மாற்றம், சொத்து வரி, குடிநீர் வசதி, மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு குறைகள் குறித்த மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களை ஆலங்குளம் யூனியன் தலைவர் திரு. திவ்யா மணிகண்டன் அவர்கள் நேரில் பெற்றுக்கொண்டார். முகாமில் கருவந்தா ஊராட்சி தலைவர் டேனியல், துணைத் தலைவர் மங்கள பொன்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மக்கள் நலப்பணியாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

முக்கியமான பல குறைகள் முகாமிலேயே தீர்க்கப்பட்டதாகவும், மக்கள் திருப்தியுடன் முகாமிலிருந்து சென்றதாகவும் கூறப்பட்டது.

– ஆலங்குளம் தாலுகா செய்தியாளர்
மணிகண்டன்.

By TN NEWS