தஞ்சாவூர் – ஆகஸ்ட் 4
தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இன்று காலை தொடங்கியவுடன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. கூட்டத்தின் ஆரம்பத்தில் முதலே மேயர் சன். ராமநாதனுக்கு எதிராக சில மாமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இதனையடுத்து, பலர் வெளிநடப்பு செய்தனர். குறிப்பாக பெண் உறுப்பினர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. சூழ்நிலை அமைதியாக அமையாததால், அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்து மேயர் சன். ராமநாதன் தனது இருக்கையில் இருந்து வெளியேறினார்.
மேயருக்கு ஆதரவாக 17 பேர் மட்டுமே உள்ளனர், எதிர்ப்பு உறுப்பினர்கள் 33 பேர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மறைமுக வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் மேயருக்கு எதிர்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்ற பேச்சு மாமன்ற வளாகத்தில் வலுப்பெற்று வருகிறது.
மேலும், கூட்டத்தை புறக்கணித்து 22 மாமன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஆணையர் அறையில் அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
📌 இரா. பிரனேஷ் இன்பென்ட் ராஜ்
முதன்மை செய்தியாளர் – தஞ்சாவூர்