Mon. Aug 25th, 2025



*தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி படிப்படியாக தென்மேற்கு வங்கக்கடல் தமிழகம் அருகே நெருங்கி வரும்.*

*இதனால் தமிழகத்தில் நாளை முதல் ஒரிரு வாரங்களுக்கு வெப்பச்சலன இடிமழை அதிகரிக்கும்.*

*இந்த சுற்று மழையானது கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி , திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் , செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர் , பெரம்பலூர், சேலம், நாமக்கல், ஈரோடு வடக்கு, மயிலாடுதுறை, தஞ்சை , திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான இடிமழைக்கும் ஆங்காங்கே பல பகுதிகளில் கனமழைக்கும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.*

*மேலும் சென்னை , திருவள்ளூர், கோவை வடக்கு, திருப்பூர் வடக்கு, ஈரோடு , கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் முதல் பரவலான இடிமழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் ஒரிரு பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.*

*மேலும் ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், தேனி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் இடி மழைக்கும் ஆங்காங்கே ஒரு சில பகுதிகளில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.*

*மற்ற மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களின் காற்று பகுதிகளில் லேசான மிதமான மழை வாய்ப்பு உள்ளது. மேலடுக்கு சுழற்சி எந்த அளவுக்கு தெற்காக நகர்ந்து வருமோ அந்த அளவுக்கு காற்று பகுதிகளில் மழை பதிவாகும்.*

சரவணக்குமார்.

By TN NEWS