பெண் காவலரை தரையில் அமர வைத்து பணியாற்றச் செய்த ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் – வீடியோ வைரல்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில், நிதி கணக்கு தொடர்பான பணிக்காக வந்த பெண் காவலர், அதிகாரிகளால் தரையில் அமர்த்தப்பட்டு பணியாற்றச் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெண் காவலர் என்ற நிலையிலும், அவருக்கு நாற்காலி கூட வழங்காமல் தரையில் அமர வைத்து ஆவணங்களைச் சரிபார்க்கச் செய்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“போலீசுக்கே இப்படியான அவமானம் என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்ன?” என நெட்டிசன்கள் கடும் விமர்சனங்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் – சரவணக்குமார்