பிறப்பால் கிறிஸ்துவரான ஒரு நடிகை அவரது பெயர் தெரியவில்லை கேரளாவில் பொதுவெளியில் புர்காவுடன் வந்திருக்கின்றார். இது அங்கு மிகப்பெரிய சர்ச்சையாகி இருக்கின்றது.
அவரிடம் இது குறித்து கேள்வி கேட்கும் பொழுது கிறிஸ்தவத்திலும் இது போன்ற உடைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருக்கின்றார் அது மிகவும் சரியானதே.
கண்ணியத்தை விரும்பக்கூடிய, பாதுகாப்பை விரும்பக்கூடிய அனைத்து பெண்களுக்கும் உரியது தான் புர்கா எனலாம். கண்ணியத்தையே இங்கு பெண் அடிமைத்தனம் என்று சிலரும் கூறுவதை என்னவென்று சொல்வது ?
பெண்ணின் உடலமைப்பும், ஆணின் உடல் அமைப்பும் ஒன்று அல்லவே ? இங்கு ஒரு வகையில் பார்க்க போனால், ஆண் அதிகமான உடையையும் பெண்கள் மிக குறைவான கவர்ச்சியான உடைகளையும் உடுத்துவது எந்த வகையில் சரி ?
கிறிஸ்துவத்தில் கன்னியாஸ்திரிகள் போடுவதும் புர்கா உடையின் ஒரு மாடல் தான். இது இன்றல்ல நேற்றல்ல பல நூறு ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளில் முதற்கொண்டு பின்பற்றப்பட்டு வருகின்றது. அப்படி என்றால் அது என்ன பெண் அடிமைத்தனமா ?
ஆபாசமாக பெண்களை காட்டுவது தான் பெண்ணுரிமை என்றால், அது பெண்ணுரிமை கணக்கிலேயே வராது. உண்மையிலேயே அதுதான் பெண்ணடிமைத்தனம்
தங்களது காம பார்வைக்கும், இச்சைக்கும், பெண்களை பயன்படுத்திக் கொள்ளும் போக்குக்கு, தோதான உடைகள் தான், ஆபாசமான மிகக் கவர்ச்சியான உடைகள் எனலாம். இதை பெண்ணுரிமை உடைகள் என்ற பெயரில் அவர்களை பழக்கப்படுத்தி விட்டார்கள். பெண்கள் இது புரியாமல் தங்களின் அருமை பெருமைகளை அவர்களே குறைத்துக் கொள்கிறார்கள்.
தங்களது சுய இலாபத்திற்காக, பணத்தின் மீது மோகம், கேளிக்கை மற்றும் கொண்டாட்டம் என அதற்கு தகுந்தாற்போல் திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் டெலிவிஷன் மற்றும் சோசியல் நெட்வொர்க் என இன்றைய நாகரீகமான வாழ்க்கை நெறிமுறைகளை மாற்றிய உலகின் மிகப்பெரிய அரசியல் பெண்களின் ஆடை கலாச்சாரம். இதில் அரசியல் ஆதாயங்கள் மற்றும் வர்த்தக ரீதியான மாற்றங்கள் தான் இன்றைய வாழ்க்கைச் சூழல்களில் மாற்றம் பெற்றுள்ளது.
சேக் முகைதீன் – இணை ஆசிரியர்.