திருப்பூர் ஜூலை 28,,
*சாலையில் சிக்னலில் தலைக்கு மேலே ஆபத்தான நிலையில் உள்ள விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமென ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் வலியுறுத்தல்.*
*மக்கள் உயிருடன் விளையாடும் அவல நிலை*
*நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் மௌனம் காப்பது ஏன்?*
*திருப்பூரில் உள்ள சாலைகளில் சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர போர்டுகளுக்கு மாதந்தோறும் பல லட்சக்கணக்கான பணத்தை வசூலிக்கும் யார் அந்த மேலிடம் ?*
*மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மதிப்புக்குரிய மருத்துவர். நாரணவரே மனீஷ் சங்கர் ராவ் ஐ ஏ எஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*அப்போது ஆட்சியரிடம் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள மனு விவரம்…*
திருப்பூரில் மொத்தமாக உள்ள சிக்னலில் வைக்கப்பட்டுள்ள விளம்பர போர்டுகளின் எண்ணிக்கை இத்தனை நாட்களாக பண வசூல் செய்தது தொடர்பாக விசாரணை செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இப்பிரச்சனை தொடர்பாக சாலை போக்குவரத்து மாநகராட்சி ஊராட்சி, நகராட்சி காவல்துறை என பல்வேறு துறையில் புகார் அளித்த பிறகும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் ?
சாலையில் சிக்னலில் யார் வேண்டுமானாலும் விளம்பர போர்டு வைக்கலாமா ?
இதன் பிறகாவது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தைரியமாக ஒவ்வொரு சிகலிலும் மொபைல் எண்ணை குறிப்பிட்டு இந்த நபருக்கு தொடர்பு கொண்டால் சிக்னலில் விளம்பரம் வைக்கப்படும் என்று விளம்பரம் செய்து பண வசூலிப்பது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக 40க்கும் மேற்பட்ட புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் சாக்கு போக்கு காரணம் கேட்டால் மேலிடம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எனக்கூறி பொய்யான காரணங்களை தெரிவித்து மனுவை முடிப்பது எந்த விதத்தில் நியாயம்?
உடனடியாக இது தொடர்பாக வெளிப்படையாக விசாரணை நடத்தி இதுவரை போர்டு வைத்து விளம்பரம் செய்தது மூலமாக வசூலிக்கப்பட்ட பணத்தை அரசுக்கு திரும்ப பெற நடவடிக்கை எடுக்கவும் இதில் ஏற்பட்ட முறைகேடுகள் தொடர்பாக வெள்ளை வெள்ளை அறிக்கை வெளியிடவும் வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது..
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம் – செய்தியாளர்.