திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் உள்ள காங்கேயம் அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு, கூடுதல் படுக்கைகள் மற்றும் புதிய கட்டட வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இப்பணிகளை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த திட்டத்தின் மூலம், காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகள், சிறப்பு சிகிச்சை பிரிவுகள், அவசர சிகிச்சை சேவைகள் ஆகியவை விரைவில் கிடைக்கவிருக்கின்றன.
அமைச்சர், கட்டுமான பணிகளின் முன்னேற்றம், மருத்துவ உபகரணங்கள், சுகாதார பணியாளர்கள் வசதி உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளிடமிருந்து நேரில் அறிந்து, பணிகளை விரைவில் முடிக்க தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.
சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம்.