Mon. Aug 18th, 2025

குடியாத்தம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரியாணி கடை உரிமையாளர் முக்தியார் (32), ஆந்திர மாநிலம் சித்தூரில் பிரியாணி கடை தொடங்க ரூ. 2.50 லட்சம் பணத்துடன் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த நூர்தீன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.

பின்னர் ஊர் திரும்பும் போது பரதராமி சோதனைச் சாவடி அருகே, அவரிடம் இருந்த பணப்பையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். இதுகுறித்து முக்தியார் பரதராமி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

குடியாத்தம் டிஎஸ்பி சுரேஷ், காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இந்த வழிப்பறியில் முக்தியாருடன் இருந்த நூர்தீனும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. நூர்தீன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

பணத்துடன் தப்பியோடிய இருவரையும் போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், பேரணாம்பட்டு ரமாபாய் நகர் சேர்ந்த பேரரசு (21) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ. 2.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்னும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கே.வி. ராஜேந்திரன், குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர்

By TN NEWS