செய்தி குறிப்பு
—————————-
சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சின் மான்புமிகு நீதியரசர்கள் திரு. G.R.சுவாமிநாதன் மற்றும் திரு. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வழக்கறிஞர் திரு. வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.
திரு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்கள் தான் சார்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் திரு.G.R.சுவாமிநாதன் அவர்கள் மீது அவரது நீதிபரிபாலனம் குறித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதியரசருக்கு கடிதம் எழுதியதை கண்டித்து இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தொடர்ந்து உள்ளது.
ஒரு நீதிபதியின் செயல்பாட்டின் மீது ஐயப்பாடு ஏற்படும் பொழுது, அதனை பொறுத்து தகவல் தெரிவிக்க உள்ள ஒரு வழிமுறையினை கடைபிடித்து செயல்படுத்தியதற்காக, இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. திரு வாஞ்சிநாதன் அவர்கள் தான் எந்த வகையிலும், பொதுவெளியில் பகிரிடப்படாத நிலையில் என் மீது இந்த அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றார். நீதியின் மாண்பினை கடைபிடிக்க, தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு தானே நீதிபதியாக இருந்து விசாரணை செய்வது என்பது நியாயமான வழிமுறையாக இருக்காது. ஒரு நீதிபதியின் நீதி பரிபாலனம் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் அதனைப் பொறுத்து சட்டத்தில் கொடுக்கப்பட்ட வழிமுறைப்படி ஒரு அமைப்பு செயல்படுவதை தடுப்பது என்பது நீதித்துறையின் சரியான அணுகுமுறை இல்லை.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி பரிபாலனம் மீது நம்பிக்கை ஏற்படும் வகையில் நீதித்துறை நடந்து கொள்ள வேண்டும் என்பதால் இது போன்ற குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி, தங்களது செயல்பாடுகளின் மூலமாக தங்களது நேர்மையான நீதி பரிபாலனத்தை நிலைநாட்டிட வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டு குழு கேட்டுக்கொள்கிறது. வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை கைவிட வேண்டுமென்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு கேட்டுக் கொள்கிறது.
இவன்
P. நந்தகுமார் சேர்மன்
K.பன்னீர்செல்வன் பொதுச் செயலாளர் D. ரவி, பொருளாளர் JAAC