Thu. Aug 21st, 2025

தென்காசி:

குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழா 5-நாள் நிகழ்ச்சிகள், நேற்று கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த் அவர்கள் தலைமையேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

மக்கள் செய்தி தொடர்பாளர் எடிசன் வரவேற்புரையாற்றினார்.

விழாவில் பரதநாட்டியம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், மல்லர் குப்பம், கிராமிய கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி போன்றவை இடம்பெற்றன.

கலை மற்றும் பண்பாட்டு துறை, தென்னக பண்பாட்டு மையம், பள்ளிக் கல்வித் துறை, மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை ஆகியவை இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தன.

மேலும் தப்பாட்டம், ஆன்மீகப் பாடல்கள், சிலம்பாட்டம், நையாண்டி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக நடத்தப்பட்டன. கதர் ஆடைகள், மகளிர் குழுக்களின் கைவினைப் பொருட்கள், கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சாரல் திருவிழா இந்த மாதம் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை குதூகலமாக நடைபெறுகிறது. அரசு பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறப்பாக பங்கேற்று பாராட்டைப் பெற்றனர்.

விழாவின் நிறைவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை துறை) கனகம்மாள் நன்றியுரை வழங்கினார். உதவி மக்கள் செய்தி தொடர்பாளர் ராமசுப்பிரமணியன் தொகுப்புரையாற்றினார்.

– தென்காசி மாவட்ட தலைமை நிருபர் ஜோ. அமல்ராஜ்

 

By TN NEWS