Thu. Aug 21st, 2025


தொடர் மழையால் ஐந்தருவி பகுதிகளில் குளிக்க ஏழாவது நாளாக தடை; சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுத்து திரும்பும் நிலை.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் நடைபெற்று வரும் தொடர்மழையால், சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த தடையால் இன்று (ஜூலை 25) ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து ஏழாவது நாளாக இத்தடை அமலில் உள்ளதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

அருவிக்குள் செல்ல முடியாத நிலையிலும், அருவியைக் காண வந்த சுற்றுலாப் பயணிகள், அங்குள்ள இடங்களில் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுத்து திரும்பி செல்கின்றனர்.

சுற்றுலா பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கும் நிலையில் உள்ளனர்.

ஜோ.அமல்ராஜ்

முதன்மை செய்தியாளர்

தென்காசி மாவட்டம்.

 

By TN NEWS