கோவை மாவட்டம் ஆனைமலை ஒன்றியம் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் திருக்கோவிலில் பணிபுரியும் நிர்வாக அலுவலர் EO அவர்கள் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் சார்ந்த குறைகளை தன்னிடம் சொல்ல அனுமதிப்பதில்லை.
நிர்வாக அலுவலர் அவர்களே பக்தர்களை சந்திப்பதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர்.
தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை நிர்வாக அலுவலகத்தில் மணிக்கணக்கில் அமர வைத்து கோவிலில் பணிபுரியும் பணியாளர்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சேவகம் செய்ய வைக்கின்றனர். தனிப்பட்ட முறையில் பணிபுரியும் பணியாளர்களை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உணவு பரிமாற வைப்பதும் அதைத் தொடர்ந்து தூய்மை காவலரை கணிப்பொறியை இயக்கச் செய்ய பணிப்பதும், மேலும் தனது குடும்ப உறுப்பினர்கள் காரில் ஏறும் வரை அவர்களது உடமைகளை சுமந்து சென்று வழி அனுப்பவும் கோயில் நிர்வாகிகளை பயன்படுத்துகிறார்.
மேலும் கோவிலில் எந்த பணிகளையும் அவர் செய்வதில்லை, இதன் காரணமாக பராமரிப்பு இன்றி இருக்கும் குடிநீர் தொட்டியில் குடிநீர் அருந்திய பல்வேறு பக்தர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் கோவில் கழிவறைகள் பராமரிப்பு இன்றி, கதவுகள் இல்லாமல், உபயோகிக்கும் நிலையில் இல்லை, இதனால் நீர் நிலைகளை பயன்படுத்தி அசுத்தம் செய்யும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
கோவிலைச் சுற்றி கழிவு பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அப்புறப்படுத்துவது இல்லை, இதனால் குப்பைகள் சேர்ந்த நிலையில் அசுத்தமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக சுமார் 25க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் சாரா அவர்களிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக கோவை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அவர்களிடம் நேரில் சென்று உரிய ஆதாரங்களை அளித்தும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற்படி கோவில் நிர்வாக அலுவலர் அவர்களுடைய தந்தை மாசாணி அம்மன் திருக்கோவில் முன்னாள் அறங்காவலர் என்றும், அவர் அதிமுக நிர்வாகி என்றும், இதனால் தனக்கு அதிமுகவில் செல்வாக்கு உள்ளது, என்றும் என்னை ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் சொல்வதை தான் இணை ஆணையர் கேட்பார், என்றும் எங்கள் மீது மனு கொடுத்து எதுவும் செய்ய முடியாது என்றும், கோவில் நிர்வாக அலுவலர் பகிரங்கமாக மிரட்டுகிறார்.
அவருடன் சேர்ந்து தினசரி பணியாளராக பணியாற்றும் கணிப்பொறி இயக்குனரும் இதற்கு உடந்தையாக செயல்படுகின்றார்.
இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கோவிலில் நிர்வாகம் சரிவர நடக்க வேண்டும். மேலும் இவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித்தலைவர், முதலமைச்சர் செல், மாவட்ட அறநிலையத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முருகானந்தம்
கோவை மாவட்ட செய்தியாளர்
தமிழ்நாடு டுடே.