Thu. Aug 21st, 2025


அஇஅதிமுக விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டது தொடர்பாக நேரில் வாழ்த்து பெற்றார் – தொண்டர்களிடம் பாராட்டுகள் குவிந்தன.

தஞ்சாவூர் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர். ரவிச்சந்தர் அவர்கள், 12 ஆண்டுகள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் அண்ணா இளைஞர் அணி துணைச் செயலாளராகவும், அதன் பின்னர் 1999ஆம் ஆண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களால் இதய தெய்வம் புரட்சித்தலைவி பேரவை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் வடக்கு மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக அந்தப் பொறுப்பில் ஊக்கமுடன் பணியாற்றி வந்துள்ளார்.

தற்போது அஇஅதிமுக பொதுச் செயலாளர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி அவர்களால், ஏகேஆர். ரவிச்சந்தர் அவர்கள் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து தஞ்சாவூருக்கு வருகை தந்த எடப்பாடியார் அவர்களை, ஏகேஆர். ரவிச்சந்தர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, அஇஅதிமுக தொண்டர்கள், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அவருக்கு நேரிலும், அலைபேசியிலும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

துணை ஆசிரியர் – சுதாகர்.

By TN NEWS