சுரண்டை நகராட்சிக்கு 5 புதிய பேட்டரி ஆட்டோக்கள் வழங்குதல் – நகர சுத்திகரிப்பு பணிக்கு நவீன துடிப்பு
சுரண்டை நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் 5 பேட்டரி ஆட்டோ வாகனங்கள் வழங்கும் விழா இன்று சுரண்டையில் நடைபெறியது.
இந்த விழாவில் தென்காசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. பழனி நாடார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வாகனங்களை நகராட்சிக்கு ஒப்படைத்தார். இந்நிகழ்ச்சியில் சுரண்டை நகராட்சி தலைவர் திரு. வள்ளிமுருகன், நகராட்சி ஆணையாளர் திருமதி ரமா திலகம், கவுன்சிலர் திரு. பரமசிவன் மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
இந்நவீன பேட்டரி ஆட்டோக்கள், சுரண்டை நகரின் திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை மேலும் விரைவாகவும் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையிலும் செயல்படுத்த முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நகர சுத்தம், பொதுநல திட்டங்கள் மற்றும் பசுமை நகரம் நோக்கில் நகராட்சி ஒரு முக்கியப் படி எடுத்துள்ளது.
நகர மக்களின் நலனுக்காக தொடர்ச்சியான மேம்பாட்டு நடவடிக்கைகளை நகராட்சி மேற்கொண்டு வருவதையும், எதிர்காலத்திலும் இதுபோன்ற திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அமல்ராஜ் – தென்காசி மாவட்டம் தலைமை செய்தியாளர்.
