Tue. Jul 22nd, 2025

அவிநாசி ஏப் 19,,



*தயாரிப்பு தேதி காலாவதி தேதி விலை உள்ளிட்ட எவ்வித விபரங்கள் இன்றி விற்பனை செய்த அவிநாசி வட்டத்திலுள்ள திருமுகன் பூண்டி பேக்கரிக்கு அபராதம்.*

கடந்த 16ம் தேதி கோவை டாடாபாத் பகுதியில் நடைபெற்ற திருப்பூர் நகரம் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள மின்சார மீட்டர் எரித்து மோசடி சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அரசு தரப்பு சாட்சியாக சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோவை சென்று பிறகு திருப்பூர் திரும்பிய போது அவிநாசி வட்டத்திலுள்ள திருமுருகன்பூண்டியில் உள்ள சிக்னல் அருகிலுள்ள பூலுவப்பட்டி பிரிவு சாலையிலுள்ள ராயல் டிலைட்ஸ் பேக்கரியில் வெயில் அதிகமாக உள்ளதால் பன்னீர் சோடா வாங்கியது அந்த கூல்டிரிங்ஸ் பாட்டிலில் தயாரிப்பு தேதி காலாவதி தேதி விலை உள்ளிட்ட எவ்வித விபரங்கள் இன்றி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கேட்டபோது உரிய பதிலளிக்க வில்லை

இது தொட‌ர்பாக அவர் மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறையில் புகாரளித்தார்.

அதன் பேரில் புகார் பதிவு செய்து புகார் எண் 2371/2025 காலாவதி தேதி/ஏப்ரல் 17 இன் படி சம்பந்தப்பட்ட உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர்கள் கடந்த 17.04.2025 அன்று திருமுருகன்பூண்டியில் உள்ள ராயல் டிலைட் பேக்கரிகளின் வளாகத்தை ஆய்வு செய்தனர்.

இது தொட‌ர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் ஈ.பி.அ.சரவணனுக்கு அனுப்பியுள்ள தகவலில்

மேற்படி திருமுருகன்பூண்டியில் உள்ள ராயல் டிலைட் பேக்கரியில் செல்லுபடியாகும் உரிமம் பெற்றிருந்த FBO, அது காட்சிப்படுத்தப்படவில்லை, முக்கிய இடத்தைக் காட்சிப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. குளிர்சாதன பெட்டியில், லேபிள் இல்லாத பன்னீர் சோடா 12 பாட்டில்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. லேபிள் செய்யப்பட்ட முறையில் உணவுப் பொருட்களை வாங்க அறிவுறுத்தப்பட்டது.  FIFO ஐப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.  FSSA இன் படி கூட்டு அபராதம் விதிக்கப்பட்டது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் சரவணக்குமார்.

By TN NEWS