Tue. Jul 22nd, 2025

சென்னை ஏப் 17,
*ஒப்பந்த தொழிலாளர்களை விரைவாக பணி நிரந்தரம் வழிவகை செய்யனும்.*

*திருப்பூர் மின் வாரியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய திருப்பூரில் நேரிடையாக கள ஆய்வு செய்ய மின்வாரிய தலைவரிடம் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.*

*சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்களை திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவரும் சமூக ஆர்வலருமான ஈ.பி.அ.சரவணன் நேரிடையாக சந்தித்தார் உடன் நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க தலைவர் KAK. கிருஷ்ண சாமி, செயலாளர் ஈஸ்வரன் இருந்தார்.*

*அப்போது தமிழ்நாடு மின்வாரிய நிறுவன தலைவர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப. அவர்கள் ஏற்கனவே மருத்துவத்துறை ,  கூட்டுறவு துறை, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றிய போது காலத்தால் என்றும் அழியாத பல்வேறு சிறப்புமிக்க திட்டங்களை செயல்படுத்தியதை நினைவு கூர்ந்து கவனிக்க அவருடைய ஈ.பி.அ.சரவணன் பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார்.*

*அதன் தொடர்ச்சியாக திருப்பூர் மின் வாரியத்தில் தற்போது நடைபெற்று வருகின்ற பல்வேறு குளறுபடிகளை சரிசெய்ய திருப்பூரில் நேரிடையாக கள ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.*

ஈ.பி.அ.சரவணன் மின்வாரிய தலைவரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்த விபரம்…

1. தமிழ்நாடு மின்வாரியம் சார்பாக அரசாணைகள் பெரும்பாலும் தமிழில் இருப்பதில்லை அனைத்து மின்வாரிய அலுவலகங்களில் முழுவதுமாக தமிழ் மொழியை பயன்படுத்த வாரியம் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. மின் வாரியத்திலுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய சிறப்பு கவனம் செலுத்தி பணிநிரந்தரம் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.

3. திருப்பூர் மாவட்டம் சர்க்கார் பெரியபாளையம் கிராமம் நஞ்சராயன் குளம் பகுதியிலுள்ள விகாஸ் சேவா டிரஸ்ட் தனியார்’ பள்ளி வளாகத்தில் தவறான ஆவணங்களின் பேரில் இலவச விவசாய மின்சார இணைப்பை கல்வி பயன்பாட்டிற்கு TNERC விதிகளை மீறி சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ளதை எங்களுடைய புகாரின் நிரந்தர துண்டிப்பு செய்யப்பட்ட பிறகும்கூட சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருப்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. திருப்பூர் மாவட்டம் , ஊத்துக்குளி வட்டத்திலுள்ள காவுத்தாம்பாளையம் கிராமம், க ச எண் 32/1 மற்றும் 32/ 1A2 ல் கிராமியம் குன்னத்தூர் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள பழைய எண் ( 04 061 002 102 ) புதிய எண் ( 03 074 002 102 ) என்ற விவசாய மின்சார இணைப்பை பெயர் மாற்றம் மற்றும்  இடமாற்றம் செய்யாமல் காலம் கடத்தி வருகின்றது தொட‌ர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர், அவிநாசி கோட்ட பகுதிகளிலுள்ள மின்துறை சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக மாதாந்திர மின் நுகர்வோர் குறைத்தீர்ப்பு கூட்டத்தில் அளிக்கப்படுகின்ற புகார் மனுக்களுக்கு உரிய காலக்கெடுவுக்குள் பதிலளிக்காமல் காலம் கடத்தி தவறு செய்தவர்களுக்கு சாதகமாக இருப்பது சட்டவிரோதமாக செயலாகும் என்பதால் யார் எந்த அதிகாரிகள் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது எவ்வித பாரபட்சமின்றி விரைவாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. மின்வாரியத்திற்கு தொடர்ச்சியாக வருவாய் இழப்பை ஏற்படுத்தும் விதமாக செயல்படுகின்ற திருப்பூர் வாவிப்பாளையம், பூலுவப்பட்டி, ஆர் கே நகர், கிராமியம் குன்னத்தூர், கிழக்கு தெக்கலூர், வெங்கமேடு, கிராமியம் அனுப்பர்பாளையம், திருப்பூர் பஜார், திருப்பூர் நகரம் தெற்கு உள்ளிட்ட பிரிவு அலுவலக அலுவலர்கள் மீது உடனடியாக துறைரீதியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பை சரிசெய்ய வேண்டும்.

6. விதி மீறி கட்டப்பட்டுள்ள வணிக ரீதியான கட்டிடங்களுக்கு முறையான ஆவணங்கள் இன்றி இணைப்பு வழங்கியது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

7. திருப்பூர் வெங்கமேடு மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பகுதியிலுள்ள வணிக மின்சார இணைப்பில் செயற்கையாக உருவாக்கியுள்ள மின் கட்டண முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

8. திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள வாவிபாளையம் பூலுவப்பட்டி மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியிலுள்ள அரசாங்க இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து முறையான வருவாய்துறை ஆவணங்கள் இன்றி தனி நபர் பெயரில் திருமண மண்டபம் பயன்பாட்டிற்கு சட்டவிரோதமாக திருமண மண்டபத்திற்கு உள்ளயே 180 006 56 Tf 2C , என்ற இணைப்பை தொடர்ச்சியாக திருமண மண்டபத்திற்கு  பயன்படுத்தி வருகின்றதால் அரசிற்கு பல லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.

9. திருப்பூர் வடக்கு வட்டத்திலுள்ள போயம்பாளையம் ஆர் கே நகர் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட பழனிசாமி நகரிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தில் எவ்வித முறையான அனுமதிகள் இன்றி வர்த்தக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று பெரிய வணிக ரீதியான கட்டம் கட்டப்பட்டுள்ளது அதிலுள்ள மின் இணைப்பை 172 010 661, Tf 5 இணைப்பை எவ்வித முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக பெயர் மாற்றம், லோடு மாற்றம் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும்.

10.திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திலுள்ள அவிநாசி மற்றும் திருப்பூர் கோட்ட பகுதிகளிலுள்ள மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் பதவி உயர்வு மற்றும் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக ஒரே அலுவலகத்திலேயே பணிபுரிந்த வந்த அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்களை கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சுழற்சி முறையில் பணிஇட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது டெப்டேசன் என்ற பெயரில் மீண்டும் அதே அலுவலகங்களுக்கு பணிக்கு வந்துள்ளனர் இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு உண்மையாக நேர்மையாக பணியாற்றி வருகின்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக இது தொட‌ர்பாக உரிய தீர்வுகாண வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை தொடர்பாக மனு அளித்து வலியுறுத்தினார்.

திருப்பூர் சரவணக்குமார்

By TN NEWS