வடமதுரை, குருசேகரம்: தென்னிந்திய திருச்சபை சென்னை பேராயம் கீழ் செயல்படும் வடமதுரை சிஎஸ்ஐ கோபி ரியல் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சபை ஊழியர் திரு தா. ரஞ்சித் குமார், பி.டி.எச் தலைமையில் கிறிஸ்துவ பாடல்களை இசைத்து வீதி உலா நடந்தது. இதில் மூத்தவர்களும் இளையவர்களும் கலந்துகொண்டு ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்வில் திருச்சபை மூப்பர் திரு இளைய கவி மற்றும் ஆலய பணியாளர்கள் ராஜேந்திரன், வினோத், நிர்வாக குழு உறுப்பினர்களான தேவப்பிரியும், ராஜன், எப்சிபா சீனிவாசன் ஆனந்தன், சசிகலா ராஜினி மார்க், விஜயா, ரபேக்கா மேரி உள்ளிட்டோர் பணியாற்றினர். திருச்சபை அங்கத்தினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
வாழ்த்துகள்!
திருவள்ளூர் மாவட்ட தலைமை செய்தியாளர்
வடமதுரை – மோ. தனசேகர்





