திருப்பூர் ஏப் 09,,
*காலாவதியான பொருட்கள் விற்பனை
ரேசன்கடை ஊழியர் டிஸ்மிஸ்.*
*செட்டிபாளையம் சொசைட்டிக்கு உட்பட்ட நந்தா நகரிலுள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 பாக்கெட் மளிகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் பெண் ஊழியர் டிஸ்மிஸ்.*
*விற்பனையாளர்களிடம் காலாவதியான மளிகை பொருட்களுக்கு கட்டணம் வசூலித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*
*காலாவதியான மளிகை பொருட்களை ரேசன்கடைகளில் விற்க காரணமாகவும் பணியில் அலட்சியமாக இருந்த வடக்கு CSR மற்றும் செட்டிபாளையம் சொசைட்டி செயலாளர் மீது துறைரீதியாக நடவடிக்கை தேவை.,*
*காலாவதியான மளிகைப் பொருட்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து ரேசன்கடை விற்பனையாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை.*
இது தொடர்பாக திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்த புகாரின் எதிரொலியாக வடக்கு வட்டத்திலுள்ள நந்தா நகரிலுள்ள ரேஷன் கடையில் காலாவதியான 408 மளிகை பொருள்கள் பாக்கெட்டுகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
அதன் பேரில் கூட்டுறவுத்துறை தரப்பில் நேரிடையாக கள ஆய்வு விசாரணை நடத்தி இது குறித்து கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) எம்.தேவி அவர்கள் ஈ.பி.அ.சரவணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது…
ஈ.பி.அ.சரவணனின் அளித்த புகார் மனுவிற்கு பின்வருமாறு விவரம்
தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூர் வடக்கு வட்டாரம் மொத்தமுள்ள 141 நியாய விலைக் கடைகளில் செட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள 26 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது.
கூட்டுறவு சார்பதிவாளர்/ பொது விநியோகத் திட்ட கள அலுவலருக்கு பிரதிமாதம் ஆய்வு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறியீட்டினை தவறாது சுழற்சிமுறையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ஒவ்வொரு மாதமும் விற்பனையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நந்தா நகர் நியாய விலைக் கடையில் வெளிக்கொணர்வு முறையில் விற்பனையாளர் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்த நிலையில் காலாவதியான மளிகைப் பொருட்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக தனியரை உடன் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதற்குண்டான தொகையினை சங்க கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இனிவருங்காலங்களில் காலாவதியான மளிகைப் பொருட்கள் ஆய்வின் போது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அனைத்து விற்பனையாளர்களுக்கும் கடும் எச்சரிக்கை விடுவிகப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது
சரவணக்குமார்
