Tue. Jul 22nd, 2025


திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் கணக்கம்பாளையம் நால்ரோடு முதல் வடக்கு அய்யம்பாளையம், வாஷிங்டன் நகர் வழியாக பெருமாநல்லூர் வரை உள்ள முக்கிய சாலையில் போதிய அளவில் தெருவிளக்குகள் இல்லாததால், இப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது.

இதனால் இரவு நேரங்களில் இந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மஞ்சள் கிணற்றை நோக்கி செல்லும் பக்தர்கள் வெளியீட்டின்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், மது போதையில் சிலர் சாலையில் சுற்றித் திரிந்து பக்தர்களை அச்சுறுத்தியதாகவும், இருசக்கர வாகனங்களில் ஒலியுடன் வந்து இடையூறுகள் செய்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த சாலை பகுதியில் காவல்துறை கண்காணிப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கடந்த மாதமே புகார் செய்திருந்தாலும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பான சாலை வசதி, தேவையான ஒளிவிசிறி மற்றும் காவல்துறை கண்காணிப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிர்வாகம் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சரவணக்குமார் – திருப்பூர் மாவட்டம்.

By TN NEWS