Tue. Jul 22nd, 2025

திருப்பூர் ஏப் 07,,
திங்கள்கிழமை,,,



*மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை அமைத்திட வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் கோரிக்கை.*

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் து.கிருஸ்துராஜ் ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

அப்போது திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனு…

திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கடைகளின் பெயர் பலகை தமிழில் பெரிதாக வைக்க வேண்டும்.

அதற்கு அடுத்த அளவில் ஆங்கிலத்திலும் அதற்கும் குறைந்த அளவில் விருப்பமுள்ள பிற மொழிகளில் வைக்க வேண்டுமென்பது தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-ல் விதி 15-ன் படி பெயர் பலகை தமிழில் வைக்கப்பட வேண்டுமென்பது விதிமுறையாகும்.

இதனை பெரும்பாலானவர்கள் பின்பற்றாமல் தமிழ் எழுத்துக்களை சிறியதாகவும், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை பெரிதாக எழுதி உள்ள பலகைகள் திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் பல பகுதிகளில் இருப்பது குறித்து எங்களுடைய சங்கம் சார்பாக தொடர்ச்சியாக புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது வரை இது தொட‌ர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வில்லை

எனவே உடனடியாக திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளிலுள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள், பள்ளி கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அனைத்து அலுவலகங்களிலும் தமிழில் பெயர் பலகை இல்லாத தொடர்பாக உரிய தீர்வுகண்டு தமிழில் பெயர் பலகை அமைப்பதை உறுதிசெய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனதிருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறாக அதில் கூறப்பட்டுள்ளது.

நமது செய்தியாளர் – சரவணகுமார்.

By TN NEWS