Tue. Jul 22nd, 2025



உசிலம்பட்டி, மார்ச் 29:
பிரசித்தி பெற்ற நல்லதங்காள் சாமியின் வாழ்க்கை வரலாறு குறித்த “அன்னை நல்லதங்காள்” என்ற வரலாற்று நூல் வெளியிடப்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குருவிளாம்பட்டி – நாவார்பட்டி இடையே அமைந்துள்ள நல்லதங்காள் கோவிலில், இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் கூமாபட்டியில், தனது ஏழு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து உயிர்நீத்த தெய்வமான நல்லதங்காள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பரவிய வாய் மொழி தரவுகளையும், வரலாற்று ஆதாரங்களையும் ஆய்வு செய்து கவிஞர் குடியரசி விஜயா இந்த நூலை எழுதியுள்ளார்.

நிகழ்வில் பாரதிய பார்வட் ப்ளாக் கட்சியின் நிறுவனர் முருகன்ஜி நூலை வெளியிட்டார். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுக நகரச் செயலாளர் S.O.R. தங்கப்பாண்டி, வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, மற்றும் பல்வேறு பார்வட் ப்ளாக் அமைப்புகளின் நிர்வாகிகள், நல்லதங்காளின் வாரிசுகள் ஆகியோர் நூலை பெற்றுக் கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

இந்த நூல், நல்லதங்காள் சாமியின் வரலாற்றை உண்மைப்படுத்தும் வகையில், மதுரை மாவட்டத்தின் எதார்த்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் முதல் பொது மக்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் நூலாசிரியர் கவிஞர் குடியரசி விஜயா தெரிவித்துள்ளார்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்

By TN NEWS