திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ரோடு, நாச்சிபாளையம் ஊராட்சியில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் மத நல்லிணக்க இஃப்தார் விருந்து நடைபெற்றது.
23.03.2025 (ஞாயிற்றுக்கிழமை) மாலை, அப்பகுதியில் உள்ள பள்ளிவாசல் அருகில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமுமுக, திமுக, மதிமுக ஆகிய கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், அவிநாசி பாளையம் காவல் ஆய்வாளர், வணிகர் சங்க நிர்வாகிகள், நோன்பாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழா மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் மனித நேயத்தை வலியுறுத்தும் விதமாக நடைபெற்றது என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு டுடே செய்தியாளர் – திருப்பூர் மாவட்டம்
சரவணக்குமார்.