Tue. Jul 22nd, 2025

திருப்பூர் மாநகர காவல் : பத்திரிக்கை குறிப்பு
வழிப்பறி வழக்கில் தொடர்புடைய எதிரி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைப்பு

அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கின் தொடர்ச்சியாக எதிரி அருண் @ அருண்குமார் (வயது – 27) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேற்கண்ட எதிரி தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதைத் தடுக்கும் வகையில் அருண் @ அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.சு.இராஜேந்திரன், இ.கா.ப., ஆணையிட்டுள்ளார்.

கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிரி அருண் @ அருண்குமாருக்கு ஓர் ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 23.03.2025 அன்று ஆணை வழங்கப்பட்டது.

நமது செய்தியாளர் – சரவணக்குமார்.

By TN NEWS