Tue. Jan 13th, 2026

கடையநல்லூரில் சோக சம்பவம் – ஒரே நாளில் உயிரிழந்த இணைபிரியாத தம்பதி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்த சங்கரன் (95) மற்றும் அவரது மனைவி கோமு (90) என்பவர்கள் இணைபிரியாத காதல் கொண்ட தம்பதியராக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து மகன்கள் உள்ளனர்.

வயது முதிர்வு காரணமாக கோமு உயிரிழந்தார். அவரது இறப்பு சங்கரனுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. மனைவியின் இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய சங்கரன், திடீரென உயிரிழந்தார்.

இந்த நிகழ்வு உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டாரை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. ஒரே நாளில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

– அமல்ராஜ், தென்காசி மாவட்ட முதன்மை செய்தியாளர்

By TN NEWS