Tue. Jul 22nd, 2025



திருப்பூர், செல்லநகர்:
கடந்த வாரம், திருப்பூர் மாநகரம் செல்லநகர் பகுதியில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் போதை பொருட்கள் விற்பனைக்கு விசாரணை நடத்தப்பட்டு, பொட்டிக்கடை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் உள்ளன. அந்தக் கடையில் ஹான்ஸ் விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதில், உணவு பாதுகாப்புத் துறையினர் நடவடிக்கை எடுத்தது தெரிய வருகிறது.

ஆய்வுக்குப் பின்னர், அதே பகுதியில் மறுபடியும் நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி, கடையில் ஹான்ஸ் விற்பனை நடக்குமெனக் கூறி, அங்கு நின்றிருந்த சிறுவனை சமூக விரோதிகளை பயன்படுத்தி அடித்து உதைத்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதன் பின்னர், சம்பந்தப்பட்ட சிறுவனுக்கு மருத்துவ உதவி பெற திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதி வழங்கப்பட்டதாகவும் அறியப்படுகிறது.

காவல்துறை, சட்ட ஒழுங்கு காப்பாற்ற வேண்டிய பொறுப்பை கருத்தில் கொண்டு, ஒருவர் தவறு செய்தால் அதற்குரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இதேசமயம், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை எந்த அடிப்படையில் இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டது? என்பதில் வருத்தம் மற்றும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.

மாவட்ட தலைமை நிருபர்
சரவணகுமார்

By TN NEWS