Wed. Jul 23rd, 2025

திருப்பூர் பிப் 26,,

*எ‌ரிவாயு நுகர்வோர் கூட்டம்.*

*பெட்ரோல் பங்கில் காற்று பிடிப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.*

*காற்று நிரப்பும் இயந்திரம்,  குடிநீர் , கழிவறை, முதலுதவிப் பெட்டி, உள்ளிட்ட வசதிகளை அனைத்து பெட்ரோல் பம்பிலும் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.*

*திருப்பூர் மாவட்ட அளவிலான எரிவாயு மாதாந்திர நுகர்வோர் குறைத்தீர்ப்பு  கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வழங்கல், மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*

இதில் அதிகாரிகள், நுகர்வோர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் நல்லூர் சண்முகசுந்தரம் , KAK.கிருஷ்ணசாமி, ஈ.பி.அ.சரவணன்,  ஆண்டிபாளையம் ரவி, ஜான்சாமுவேல், நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள்,  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொது மக்களின் குறைகளை எடுத்துரைத்து பேசினர்.

அதில் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத்தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் அளித்த மனு சிலிண்டருக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடை செய்து பாதுகாப்பாக சிலிண்டர் டெலிவரி செய்வதை உறுதிசெய்ய வேண்டும், பெட்ரோல் பம்பில் தூய்மையான குடி நீர் வசதி இருக்க வேண்டும். பெட்ரோல் பங்கிற்கு வரும் வாகன ஓட்டிகள், எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக சுத்தமான குடி நீரை குடிக்க முடியும். இதுவும் மிகவும் முக்கியமான விதிகளில் ஒன்றாக உள்ளது.

திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் முதலுதவி பெட்டி அவசியம். ஏதேனும் அவசர மருத்துவ உதவி தேவைப்படால் முதலுதவி அளிக்கும் வகையில், அடிப்படை மருந்து மற்றும் மருத்துவ பொருட்களை வைத்து இருக்க வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் விபத்தில் ஏதேனும் சிக்கிவிட்டால் அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க தேவையான முதலுதவி பெட்டி இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS